Event Details

13. 01. 2023 அன்று பொங்கல் விழா கொண்டாட்டம் தூய நெஞ்சக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

     காலை 11.00 மணி அளவில் பொங்கல் விழா கொண்டாட்டமானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கல்லூரியின் இல்லத்தந்தை தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் தந்தை அருட்திரு முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் ச.ச., அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் க. மோகன்காந்தி பொங்கல் குறித்த சிறப்புச் சொற்பொழிவை ஆற்றினார்.

     கல்லூரி மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு, கரும்பு, மஞ்சளை வைத்துப் படைத்துப் பொங்கல் திருவிழாவை வரவேற்றனர்.

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியானது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடலோடு தொடங்கியது. இப்பாடலுக்கான நடனத்தை பிரிவு – I மாணவிகளும் AICTE கல்விப் பிரிவின் மாணவிகளும் இணைந்து சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியைக் கல்லூரி (பிரவு –  I ) - யின் மாணவியர் புலத்தலைவர் முனைவர் A. மெர்சிலின் அனிதா அவர்களும், பேராசிரியை முனைவர் ஆரோக்கிய மேரி அவர்களும் ஒருகிணைத்தார்கள்.

     இதைத் தொடர்ந்து மாணவ – மாணவியர்களுக்கான பொங்கல் சிறப்புப் போட்டிகள் தொடங்கின. மாணவர்களுக்கான கபடிப் போட்டி, உறியடித்தல் போட்டி, மெதுமிதிவண்டிப் போட்டி, சாக்கு ஓட்டம் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.

     மாணவியர்களுக்கான உறியடித்தல் போட்டி, மெதுமிதிவண்டிப் போட்டி, பலூன் பாதுகாத்தல் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, கேளிக்கை விளையாட்டுகள், சதுரங்கப் பந்து விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடந்தேறின. இப்போட்டிகளுக்கான இந்நிகழ்ச்சியை பேரா. முனைவர் ஜேக்கப் ஸ்டான்லி இன்பராஜ் அவர்கள் ஒருங்கிணைத்தார். மேலும் மாணவர்களில் பல்திறன் சிறப்புகளை வெளிப்படுத்தும் போட்டிகளும் நடைபெற்றன. இதில் பல குரல் திறன் (மிமிக்ரி), பாடல்கள், ஆடல்கள் உள்ளிட்ட மாணவர்களின் திறன்கள் கண்டறியப்பட்டது.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குச் கல்லூரியின் செயலரும் இல்லத் தந்தையுமான அருட்தந்தை முனைவர் ஜான் அலெக்சாண்டர் அடிகளாரும், கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் அடிகளாரும் பாராட்டி, ஊக்கப்படுத்தி மாணவ – மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியைக் கல்லூரியின் துணை முதல்வர் (பிரிவு – I ) அருட்தந்தை முனைவர் தியோபில் ஆனந்த் அடிகளார் ஒருங்கிணைத்தார். கல்லூரியின் கல்விப் புலத்தின் துணை முதல்வர் (பிரிவு – I ) பேரா. முனைவர் சேவியர் ராஜரத்தினம், முனைவர் சிவசந்திர குமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.