Event Details

தமிழ்த்துறையின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பில் மாணவர் விவாத அரங்கம் 16.03.2022 அன்று முற்பகல் 11.30 மணி முதல் 1.15 மணிவரை கரேஞோ அரங்கத்தில் நடைபெற்றது.

இணைய வழிக் கல்வி என்பது நெருக்கடி நிலையில் தற்காலிகத் தீர்வாக இருக்கிறது, கற்றலை உலகமயப்படுத்தியிருக்கிறது, கற்றலை எளிதாக்கியிருக்கிறது, கற்றலின் மகத்துவத்தைக் கேலி செய்கிறது, ஆசிரியரையும் மாணவரையும் அந்நியப்படுத்தியிருக்கிறது என்ற தலைப்புகளில் விவாதம் நடைபெற்றது.

திருமதி ஸ்டெல்லாராணி, ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுப்பேட்டை அவர்கள் மாணவர்களின் விவாதங்களை நெறிப்படுத்தினார்.

பத்து மாணவர்கள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினர்.

நிகழ்வினைத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா  ஒருங்கிணைப்புச் செய்தார்.