Event Details

6/12/24 அன்று நேரு யுவா கேந்திரா - வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக  "யுவா உட்சவ் 2024 " நிகழ்ச்சி மாவட்ட அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருப்பத்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான குழு நடனப் போட்டியில் கணிதத்துறை ( சுழற்சி 1) மாணவர்கள் முதல் பரிசான ரூபாய் 7000 / பரிசுத்தொகையைப் வென்றனர்.

பேச்சுப் போட்டியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு ( சுழற்சி- 2)மாணவி தீபஜோதி இரண்டாம் பரிசாக ரூபாய் 2500 / பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திளராகத் தூய நெஞ்சக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் . மோகன்காந்தி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.