Event Details

நமது கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலின்படி தமிழ்த்துறையின் தமிழ்மன்றத் தலைவர் முனைவர் ஆ. பிரபு ஒருங்கிணைப்பில், கன்னியாகுமரியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டித் தமிழக அரசு கல்லூரிக் உயர்கல்வித்துறை சார்பாக 18.12.2024 அன்று மாவட்ட அளவில் நடத்திய போட்டிகளில் நம் கல்லூரி மாணாக்கர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் பரிசுகளை வென்றனர். குறும்படப் பிரிவில் முதல் பரிசும், ஓவியப்போட்டியில் இரண்டாம் பரிசும் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.