Event Details
தமிழ்த்துறை சுழற்சி-1 வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் சார்பாக “தொல்லியல் உலா” களப்பயண நிகழ்வு 01.03.2025 அன்று நடைபெற்றது. தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ள 60 மாணவ மாணவிகள், காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் புறப்பட்டு, சந்திரபுரம் – போர்க்களக் காட்சியை விளக்கும் சோழர்கால நடுகல், செல்லியம்மன் கொட்டாய் – புதிய கற்காலப் பாறை ஓவியம், நரியனேரி – கழுமர நடுகல், ஆண்டியப்பனூர் – பெருங்கற்கால கற்திட்டை, குண்டு ரெட்டியூர் – சங்ககால வாழ்வியல் மேடு, மடவாளம் – தலைப்பலி நடுகல் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் அடையாளங்களை நேரில் கண்டு பயன் பெற்றனர். மேற்கண்ட ஒவ்வொரு இடங்களிலும் தமிழ் மன்றத் தலைவர் முனைவர் ஆ. பிரபு மாணாக்கர்களுக்குத் தொல்லியல் வரலாற்றியல் சார்ந்த விளக்கங்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் தமிழ் துறைப் பேராசிரியர்களும் மாணவர்களோடு இணைந்து கலந்து கொண்டனர்.