Event Details
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி (தன்னாட்சி) மகளிர் மையத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 06.03.2025 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முதலாவதாக பொருளியல் துறை மாணவி செல்வி ஹரிபிரியா அவர்கள் வரவேற்புரையும்> கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர் எஃப்.சில்வியா அவர்கள் அறிமுகவுரையும் ஆற்றினர்.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் முனைவர் பிரவீன்பீட்டர் அடிகளார் அவர்கள் நல்லாசி வழங்கினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் தா.மரியஅந்தோணிராஜ் அவர்களின் வாழ்த்துரை வழங்கினார். கூடுதல் முதல்வர் அருட்தந்தை முனைவர் கே.ஏ.மரிய ஆரோக்கியராஜ் அடிகளார் தலைமைத் தாங்கினார். திருப்பத்தூர் பொன்விழா லயன்ஸ்கிளப் செயலாளர் லயன்.எம்.ஜி.சந்திரசேகர்> பொருளாளர் லயன்.கே.மாயகிருஷ்ணன்> திருப்பத்தூர் அன்னை தெரேசா லயன்ஸ்கிளப்பின் தலைவர் லயன்.ஜி.ராஜேஸ்வரி மற்றும் செயலரும் நல்லாசிரியருமான எல்.என்.ஆர்.இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘பெண் சமத்துவம்’ என்னும் பொருண்மையில் பேச்சு> கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் செல்வி அனுசேகர் அவர்கள், “இன்றைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கு அரணாக விளங்கும் சட்டங்களும்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளான. கல்வி மறுப்பு> வரதட்சனை> குழந்தைத் திருமணம்> மறுமணம் மறுப்பு> பாலியல் வன்கொடுமை மற்றும் கருகலைப்பு உள்ளிட்ட சிக்கல்கள் சமூகத்தில் உள்ளன. அவற்றை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் 800-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்புச் செய்த கல்லூரியின் மகளிர் மையத்தின் தலைவர் முனைவர் அ. மெர்சிலின் அனிதா உள்ளிட்ட அனைத்துப் பெண் பேராசிரியர்களும் பங்கேற்றனர். இறுதியாக மூன்றாமாண்டு நுண்ணுயிரியல் துறை மாணவி செல்வி முபாரக் நன்றியுரை ஆற்றினார்.