Event Details
5/6/2025 அன்று திருப்பத்தூர் நகர மன்றத் தலைவர் திருமிகு.சங்கீதா வெங்கடேசன் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமிகு. சாந்தி அவர்கள் முன்னைலையில் உலகச் சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து திருய்பத்தூர் ஏரிக்கரையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியை நகராட்சித் தூய்மைப் பணியாளர் அலுவலர் திரு. பூபதி அவர்கள் ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூய நெஞ்சக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் க.மோகன்காந்தி, முனைவர் உ.ரமேஷ், முனைவர் ஆ. நெப்போலியன் ஆரோக்கியராஜ் , பேரா. வ.மதன்குமார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ - மாணவியர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.