Event Details

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தேசிய மாணவர் படை (NCC), நாட்டு நலப்பணித் திட்டம் (NSS), தூயநெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர் மற்றும் இந்தியப் பொது நிர்வாகவியல் நிறுவனம் (IIPA), திருப்பத்தூர் மற்றும் லயன்ஸ் கிளப் (Lions Club), திருப்பத்தூர் இணைந்து நடத்திய சர்வதேச யோகா தினம் (International Yoga Day) 21.06.2025 தூய நெஞ்சக் கல்லூரியில் சனிக்கிழமை அன்று காலை 6.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. முன்னதாக, என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் முனைவர் கே. சிவக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் இல்லத்தந்தையும் செயலருமான அருட்தந்தை முனைவர் பிரவீன் பீட்டர் அடிகளார், கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் டி. மரிய அந்தோணிராஜ் அடிகளார், கூடுதல் முதல்வர் அருட்தந்தை முனைவர் தியோபில் ஆனந்த் அடிகளார், துணை முதல்வர் அருட்தந்தை முனைவர் எஸ். டேனியல் அம்புரோஸ் அடிகளார் மற்றும் இந்தியப் பொதுநிர்வாகவியல் தலைவர் திரு கே. எம். சுப்ரமணியன் அவர்களும் லயன்ஸ் கிளப் தலைவர் கே. லிங்கன்னன் அவர்களும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். யோகா பயிற்றுநர்களாக திருமதி, எஸ். கீதா எம்.எஸ்.சி. மற்றும் திருமதி ஜி. ஜெயந்தி எம்.எஸ்.சி. திருப்பத்தூர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். யோகா பயிற்சியில் ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வமாகக் கலந்துகொண்டு சர்வதேச யோகா தினத்தைச் சிறப்பித்தனர். நிகழ்வின் இறுதியாக, இந்தியப் பொது நிர்வாகவியல் செயலர் முனைவர் . சேவியர் சூசைராஜ், லயன்ஸ் கிளப்பின் மாவட்டப் பொறுப்பாளர் முனைவர் சி. ஆர். கிறிஸ்டி ஆனந்தன் மற்றும் தூய நெஞ்கச் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் . மோகன்காந்தி அவர்களும் நன்றியுரை வழங்கினர். மேலும் தூயநெஞ்சக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான முனைவர் உ. ரமேஷ், முனைவர் ஆ. நெப்போலியன் ஆரோக்கியராஜ், முனைவர் பூ. சந்திரசேகர் ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.