Event Details

தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர். 

இந்திய அரசியல் சாசன தினம் 

நாள்: 26.11.2021
நேரம் : பிற்பகல் 2.30 மணி.

சிறப்பு விருந்தினர் : திருமிகு.கே.சந்துரு,
மேனாள் நீதியரசர்,
சென்னை உயர்நீதி மன்றம்.

இந்திய அரசியல் சாசன தினம் தூய நெஞ்சக் கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் அந்தோனி ராஜ் தலைமை தாங கினார். கூடுதல் முதல்வர் முனைவர் மரிய ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார்.


நீதியரசர் கே.சந்துரு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: இந்திய அரசியல் சாசனம் முகப்புரையில் இந்தியா 'மதச் சார்பற்ற நாடு' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. சாசனத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கர் போன்றோர் மதச்சார்பின்மைக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இன்றைக்கு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கே ஆபத்து வந்திருக்கிறது. நாம் என்னவிலை கொடுத்தேனும் அதைக் காப்பாற்றியாக வேண்டும். எனது தீர்ப்புகள் தனிநபர் சாகசங கள் அல்ல; சமூகநீதியின் தேவையையொட்டி விளைந்தவை. நான் வழக்கறிஞராக, நீதிபதியாக எதிர்கொண்ட வழக்குகளில் ஒன்றுதான், இன்றைக்கு வெளிவந்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படத்தின் கதை. காணாமலாக்கப்பட்டதன் கணவனைத் தேடிய ஒரு பழங்குடிப் பெண்ணின் போராட்டம் உக்கிரமானது. இந்தத் திரைப்படம் வந்த பிறகு இருளர் பழங்குடி மக்கள் பற்றிப் பொது அரங்கில் ஒரு கவனம் ஏற்பட்டிருக்கிறது. இம்மக்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என இளைஞர்கள் என்னைத் தொடர்புகொண்டு கேட்கிறார்கள்.  இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது' என்று பேசினார்.

பிறகு நீதியரசர் கே.சந்துரு அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடினார்கள். இந்திய அரசியல் சாசனம், குற்றச் சட்டங்கள், நீதித்துறையின் போக்குகள் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு நீதியரசர் விடையளித்தார். நிகழ்வினைப் பேராசிரியர் கி.பார்த்திபராஜா ஒருங்கிணைத்தார்.