Event Details

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் . மோகன்காந்தி எழுதிய " வெண்குடைக்கீழ் செங்கோலோச்சி; கொடுங்கோல் அஞ்சிய அரைசர்என்ற நூல் தூய நெஞ்சக் கல்லூரியிலுள்ள கரேஞோ அரங்கில் 23/02/2026 அன்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் . ரமேஷ் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் அடிகளார் மற்றும் இல்லத் தந்தை முனைவர் பிரவின் பீட்டர் அடிகளார் ஆகியோர்  ஆசியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்ச்செம்மல் முனைவர் இரத்தின நடராசன் தலைமை வகித்தார். தொல்லியல் அறிஞர் பெ. வெங்கடேசன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நூலை பிரிவு 1 இன் துணைமுதல்வர் அருட்தந்தை டேனியல் அம்புரோஸ் வெளியிட பிரிவு 2 இன் துணை முதல்வர் அருட்தந்தை சாம்சன் சண்முகம் பெற்றுக் கொண்டார்.

தமிழ்துறைத் தலைவர்கள்  முனைவர் கி. பார்த்திபராஜா , முனைவர் . சரளாதேவி மற்றும் இசுலாமியாக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.முஜிபுர் ரகுமான் ஆகியோர் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினர். நூலாசிரியர் முனைவர் . மோகன்காந்தி ஏற்புரை வழங்கினார்.

 

 சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் திரு. கே.சி. எழிலரசன் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் சிறப்பாக சமூகச் சேவையாற்றிய  மாணவமாணவியருக்குச் சான்றிதழ் வழங்கினார். இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  முனைவர் .ஆரோக்கிய நெப்போலியன்ராஜ்  நன்றியுரை வழங்கினார்.

மாணவத் தலைவர் ஜனார்த்தனன் மாணவியர் தலைவியர் நந்நினி மற்றம் நித்தியபிரியா ஆகியோர் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.