Sacred Heart College (Autonomous) – Tirupattur

பறையிசைப் பயிற்சி - மாற்று நாடக இயக்கம் சுழற்சி - II

Back to Events

18.08.2026 அன்று மாற்று நாடக இயக்கம்  சார்பாக பறையிசைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பறையிசைப் பயிற்சியாளராக திருமிகு  க.சாமு  நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர், கலைத்தாய் அறக்கட்டளை, திருப்பத்தூர். அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கினார்.  இந்நிகழ்வில் மாற்று நாடக இயக்க உறுப்பினர்கள்  கலந்துகொண்டு பறையின்  வரலாறு பறையிசையின் முக்கியத்துவம் ஆகியவற்றினை அறிந்துகொண்டு பறையினை அடிப்படை அடவுகளை இசைக்கவும் கற்றுக்கொண்டனர். இந்நிகழ்வவு மாணவர் மத்தியில் மேடையேறும் தயக்கம் நீங்க வழிவகுத்தது. மேலும் அனைவரும் பறையிசைத்து ஆடி மகிழ்ச்சியுடன் கற்று உணர்ந்தனர்.

இந்நிகழ்வினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் (சுழற்சி-II) முனைவர் வீ. பூமிநாதன்  மற்றும் முனைவர் கோ.கமலா அவர்கள் ஒருங்கிணைத்தனர். மேலும் மாற்ற நாடகம் இயக்கச் செயலர், துணைச் செயலர்  அதன் உறுப்பினர்கள்  50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.