
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி (தன்னாட்சி) மகளிர் மையத்தின் சார்பாக ”பாலின சமத்துவம்: சிறந்த சமூகத்திற்கான ஒரு பாதை“ (Gender Equality: A Path to a Better Society) என்ற தலைப்பில் 17.08.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் சிறப்புச் சொற்பொழிவு காமராசர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நமது கல்லூரியின் இல்லத்தந்தை மற்றும் செயலர் அருட்தந்தை இக்னேஷியஸ் ஸ்டான்லி லாரன்ஸ் அடிகளார் மற்றும் துணை முதல்வர் அருட்தந்தை ஹெச். ஹென்றி டேனியல் அம்புரோஸ் அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் அ. ஜெனிஃபர் மேரி ஜோ வரவேற்புரை ஆற்றினார். வேதியியல் துறைப் பேராசிரியர் முனைவர் ச. கிரசென்சியா யாழினி நன்றியுரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை மாணவி ரூபினி ஸ்ரீ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.ரோஸ் சிறப்புச் சொற்பொழிவாளரை அறிமுகப்படுத்தினார்.
முனைவர் மு.ரோஸ், முனைவர் ஏ.சைலஜா, முனைவர் ச. அல்போன்சா மேரி, பேரா.அ.ஜெனிஃபர் மேரி ஜோ, முனைவர் ச. கிரசென்சியா யாழினி ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அறுநூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய மாணவிகளின் முதன்மையர் முனைவர் அ. மெர்சிலின் அனிதா உள்ளிட்ட அனைத்துப் பெண் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.