Sacred Heart College (Autonomous) – Tirupattur

"படைப்புகளும் வெளியீட்டு முறை வாய்ப்புகளும்"- சுழற்சி-2

Back to Events

தொல்காப்பியர் முதுகலைத் தமிழ் மன்றம், தமிழ்த்துறை  (சுழற்சி-2) சார்பில்   படைப்புகளும் வெளியீட்டு முறை வாய்ப்புகளும் எனும் தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவானது 24.08.2026 அன்று காலை 10.00 மணியளவில் ஒயாசிஸ் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. இந்நிகழ்வில்  முதுகலைத் தமி்ழ் இரண்டாமாண்டு மாணவி அ.ஷாலினி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து முனைவர் ந.சோழன் அவர்கள்  சிறப்பு அழைப்பாளரை முறைப்படி அறிமுகவுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார். பிறகு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம.சரளாதேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  எழுத்தாளர் திரு . நா. கோகிலன் அவர்கள் படைப்புகளும் வெளியீட்டு முறை வாய்ப்புகளும் என்ற  தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். படைப்பிலக்ககியத்தின் தன்மைகள், படைப்புகளை வெளிப்படுத்துவதற்கான பல்வேறு வாய்ப்புகள், இன்றைய தொழில் நுட்பச் சூழலில் படைப்பாளருக்குக் கிடைக்கும் புதிய தளங்கள் ஆகியவற்றைக்  கவிதை வரிகளுடனும், படைப்புகளின் எடுத்துக்காட்டுகளுடனும்  விளக்கினார். இந்த வகையில் அவரது உரை மாணவர்களிடையே படைப்பாற்றலையும் இலக்கிய வாசிப்பு ஆர்வத்தையும் வளர்க்கும் போக்கில் அமைந்தது.

நிகழ்வின் நிறைவாக, மாணவர்களின் படைப்பாற்றல், இலக்கிய வாசிப்பு, சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுத் திறனை மேம்படுத்தும் பயனுள்ள உரையாகச் சொற்பொழிவு அமைந்தது என்பதை எடுத்துக் கூறி முனைவர் ஜெ.ஜெயசித்ரா அவர்கள்  நன்றி கூறினார். இந்நிகழ்வில் தமிழ்த் துறையின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள்  கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியினை முதுகலைத் தமி்ழ் இரண்டாமாண்டு மாணவி ரா.ஷாலினி  அருமையாகத் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வினை முனைவர் ந. சோழன் மற்றும் முனைவர் ஜெ.ஜெயசித்ரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சிறப்புச் சொற்பொழிவானது நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.