தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் - 635 601
முதலாம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் - அறிக்கை
நாளும் பொழுதும் :22.08.2026 / காலை 9.00 மணி,
நிகழிடம் : காமராசர் அரங்கம்.
22.08.2026 நாளன்று முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களின் பெற்றோர் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் அருள்திரு. முனைவர் டேனியல் அம்புரோஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அருள்திரு. முனைவர் பிரவீன் பீட்டர் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரையும் ஆலோசனைகளும் வழங்கினார். “பேற்றோர்களே! உங்கள் பிள்ளைகளின் கற்றல்சார்ந்த செயல்பாடுகளைக் கவனியுங்கள். வீட்டில் அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள். வீட்டில் கூடுதல் நேரங்களைபடிப்பதற்கு உருவாக்குங்கள். மாணவர்கள் அலைபேசியைப் பயன்படுத்தவை குறைக்க வேண்டும். கற்றலுக் குமட்டும் அலைபேசியைப் பயன்படுத்த வேண்டும்” என்று கல்லூரி முதல்வர் அவர்கள் பேசினார். இந்நிகழ்வில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வுக் காணொளிப் படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பல்வேறுதுறைப் பேராசிரியர்கள், கல்விப் புலமுதன்மைமையர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக, மாணவப்புல இணை முதன்மையர் முனைவர் ம.கருணாநிதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். முனைவர் ஏ.சைலஜா அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இக்கூட்டம் நிறைவுற்றபின்னர், பல்வேறு துறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோருடன் துறைகளில் நடை பெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்தார்கள். பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் மாணவர்கள் பெற்றோர்களுக்குப் புரிதலையும், நிர்வாகம் தம் கல்விப்பணியைத் திறம்பட செயல்பட பேருதவியாக இருந்தது.