தமிழ்த்துறை – வீரமாமுனிவர் தமிழ்மன்றம்
சிறப்புச் சொற்பொழிவு – நிகழ்வு அறிக்கை 2026
|
நிகழ்ச்சி |
சிறப்புச் சொற்பொழிவு |
|
தலைப்பு |
பாரம்பரிய உணவு வகைகளும் சித்தர்களும் |
|
நாள் / நேரம் |
11.09.2026 / காலை 10.00 மணி |
|
இடம் |
தந்தை பெரியார் அரங்கம் |
தமிழ்த்துறைப் பிரிவு II வீரமாமுனிவர் தமிழ்மன்றம் சார்பில் மாணவர்களுக்கு பாரம்பரிய உணவுமுறையின் சிறப்புகள், தமிழர்களின் வாழ்வியலோடு உணவு கொண்டிருந்த தொடர்பு, சித்தர்களின் உணவுமுறை மற்றும் உடல்நலக் கருத்துகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பாரம்பரிய உணவு வகைகளைப் பாதுகாத்தல், இயற்கை சார்ந்த உணவுப் பழக்கங்களை மேம்படுத்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் அவசியமும் விளக்கப்பட்டது.
நிகழ்விற்கு வரவேற்புரையை திரு. பி. ருத்ரன், விலங்கியல் துறை இரண்டாமாண்டு, வழங்கினார். வாழ்த்துரையை முனைவர் ம. சரளாதேவி, தமிழ்த்துறைத் தலைவர் – பிரிவு II, வழங்கினார். சிறப்புரையை மருத்துவர் வி. விக்ரம்குமார், சித்த மருத்துவர், திருப்பத்தூர், வழங்கினார். அவர் சித்த மருத்துவத்தின் அடிப்படைகள், பாரம்பரிய உணவுகளின் மருத்துவப் பயன்கள் மற்றும் உடல் நலத்தைப் பேணுவதில் உணவின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
நன்றியுரையை ம. பிரிய லட்சுமி, கணினி அறிவியல் துறை இரண்டாமாண்டு, வழங்கினார். கா. அன்பரசு, த. திருப்பதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, பாரம்பரிய உணவுமுறை மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான பல்வேறு கருத்துகளை அறிந்து கொண்டனர். இந்நிகழ்வு மாணவர்களிடையே தமிழரின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டையும் ஆரோக்கியமான வாழ்வியலையும் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.