Sacred Heart College (Autonomous) – Tirupattur

உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Back to Events

தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) மாற்று நாடக இயக்கம் சார்பாக 07.09.2026 அன்று உலக எழுத்தறிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பறை இசைப் பயிற்சியாளர் திரு.க.சாமு (கலைத்தாய் அறக்கட்டளை, திருப்பத்தூர்) அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி பறை இசை மூலமாகக் கல்லூரி மாணவர்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வினை மாற்று நாடக இயக்கப் பொறுப்பாளர்கள் முனைவர் வீ. பூமிநாதன் மற்றும் முனைவர் கோ.கமலா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

இந்நிகழ்வில் கல்லூரியில் கூடுதல் முதல்வர் தந்தை முனைவர் தியோபில் ஆனந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார், கல்லூரியின் துணை முதல்வர் சாம்சன் சண்முகம் அவர்கள் நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரியில் துறை முதன்மையர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.